புதியவை

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் தொடரும் போராட்டம்

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் தொடரும் போராட்டம்

நிலுவை சம்பளத்தைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
நிலுவை சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி 2 வாரங்களாக கடதாசி ஆலை ஊழியர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடதாசி ஆலை ஊழியர்கள் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
கடதாசி ஆலையின் கட்டடமொன்றின் மீது ஏறி ஊழியர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
*2014 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான சம்பளம்
*இந்த வருடத்தின் ஜூலை மாத சம்பளத்தின் 30 வீதம்
*இந்த வருடத்தின் ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கான சம்பளம் என்பன இதுவரை வழங்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மின்சார கட்டணம் செலுத்தப்படாமையால் இந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி கடதாசி ஆலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்சார துண்டிக்கப்பட்டதை அடுத்து தொழிற்சாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.