புதியவை

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டன

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டன

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எந்தவொரு கையடக்கத் தொலைபேசி வலையமைப்பின் மூலமாகவும் பரீட்சைப் பெறுபேறுகளை அறிந்துகொள்வதற்கான வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன.
EXAM SPACE GV SPACE பரீட்சை சுட்டெண்ணை டைப் செய்து 1919 க்கு குறுந்தகவலை அனுப்பி பரீட்சைப் பெறுபேற்றை அறிந்துகொள்ள முடியும்.
கொழும்பு மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர வலயங்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகளை அந்தந்த பாடசாலை அதிபர்கள், இன்று முற்பகல் 10.30 மணிக்குப் பின்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறு பிரிவில் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் அடங்கிய பொதிகள் இன்று தபாலில் சேர்க்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் மாவட்டங்களுக்கான தமிழ் மொழிமூல வெட்டுப்புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல், கேகாலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 154 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 153 ஆக பரீட்சைகள் திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 152 ஆக காணப்படுகின்றது.
நுவரெலியா, திருகோணமலை, புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 151 ஆகும்,
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 150 என்ற ஆகக்குறைந்த வெட்டுப்புள்ளி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளைப் பார்வையிட

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.