புதியவை

தமிழ் கைதிகளுக்கு முதற்கட்டமாக பிணையைப் பெற்றுக்கொள்வோம் – மனோ கணேசன்

தமிழ் கைதிகளுக்கு முதற்கட்டமாக பிணையைப் பெற்றுக்கொள்வோம் – மனோ கணேசன்

தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மனோ கணேசன் பதிலளித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
நீண்ட காலமாக சிறையில் இளமைக்காலத்தைக் கழித்துவிட்ட காரணத்தினால் அவர்களுக்கு ஒரு நஷ்ட்ட ஈடு வழங்கப்பட்டாலும் கூட நான் சந்தோசப்படுவேன். அதுவும் எனது நிலைப்பாடு. ஒரு அரசாங்கத்தின் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இவற்றை நாங்கள் கணக்கில் எடுக்க வேண்டும். காரணம் இந்த அரசாங்கத்திற்குள் கூட ஒரு தரப்பினர் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு மட்டுமல்ல பிணை கூட வழங்கக்கூடாது என்று சொல்கின்றனர். அது மாத்திரமல்ல எந்தவித சலுகையும் வழங்கக்கூடாது என்று சொல்கின்றனர். அதேவேளையில், மறுதரப்பில் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டும், அதாவது தண்டனை வழங்கப்பட்ட கைதிகளுக்கும் சரி வழக்குக் கைதிகளுக்கும் சரி பொலிஸ் விசாரணை மட்டத்தில் இருக்கும் கைதிகளுக்கும் சரி அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று சொல்கின்றார்கள். முதற்கட்டமாக பிணையைப் பெற்றுக்கொள்வோம்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.