
ஜெனீவா அறிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகளது தலைவர்களின் கருத்துக்களை கேட்டறியும் சர்வகட்சி சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 21 தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
ஒரு கட்சியிலிருந்து கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட மூவருக்கு இந்த சந்திப்பில் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பி. திகாம்பரம் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.