புதியவை

கொக்மாதூவ முதல் இமதூவ வரையான தெற்கு அதிவேக வீதி மீள திறக்கப்பட்டது

கொக்மாதூவ முதல் இமதூவ வரையான தெற்கு அதிவேக வீதி மீள திறக்கப்பட்டது



தெற்கு அதிவேக வீதியில் தற்காலிகமாக மூடப்பட்ட கொக்மாதூவ தொடக்கம் இமதூவ இடையிலான பகுதி மீள திறக்கக்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக முற்பகல் 10 மணியளவில் வீதி திறக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிவேக வீதியின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்தார்.
பலத்த மழைக் காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதூவ தொடக்கம் இமதூவ வரையான பகுதி மறு அறிவித்தல் வரை இன்று (04) அதிகாலை மூடப்பட்டது.
மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த பகுதியில் தொடரும் சீரற்ற வானிலைக் காரணமாக வீதி மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் நிமித்தம் இன்று (04) பிற்பகல் 2.35 வரை குறித்த வீதியுடனான போக்குவரத்தை முற்றிலும் தவிர்க்குமாறு சாரதிகளிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.