புதியவை

கண்ணுக்குத் தெரியாது (கவிதை) -மீ.விசுவநாதன்





ஆகாயத்தில்
தன்
இரண்டு சிறகுகளையும் 
விரித்தபடி
காற்றைக் கிழித்தபடி
விமானமும்,
கழுகும் பறப்பதைப் பார்க்கிறேன் !

விமானம்
ஆர்ப்பாட்டச் சத்தமுடன்
வானத்தை
மாசுபடுத்திக் கொண்டே
போவதை அதன்
வெண்புகைக்கோடு
காட்டிக் கொடுக்கிறது....

கழுகும்
மிக லாவகமாகப்
பறக்கிறது உச்சியில்..
எனக்கது
ஒரு புள்ளியாகத் தெரிகிறது

அதுவும் தன்
கழிவால் வானை
மாசுபடுத்தத்தான் செய்கிறது
ஆனால்
என் கண்ணுக்குத்
தெரிவதில்லை
ஒரு யோக்கியனின்
கள்ளத்தனங்களைப் போல..

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.