புதியவை

எழுந்து நிற்கவாஒதுங்கிப் போகவாகவித- வீ.டீ.எம்.இம்றாத்
அறிவியலோடு மாற்றமடைந்து என்னை - வழிப்படுத்தாத
கொள்கைகள்
என்மீது
திணிக்கப்படுகின்றது - என் சூழலால்.
காலத்தோடு சதுரங்கம்
விளையாடும் எனது மார்க்கத்துக்கு, காலம்கடந்த மரபுகளை
தடையாக விதிக்கின்றது -  எனது சூழல்.
வரலாறு சொல்கிறது - எனது சூழல்
ஆனால்,
நேற்றைய வெற்றியாளனை மட்டுமே பின்பற்றி நடப்பதற்கு எனக்குடன்பாடில்லை!
ஏனென்றால்,
அவன் கடந்த காலத்தின் கடைசி முடிவு: நானோ எதிர்காலத்தின் முடிவிலியைத்
தேடுகிறேன்.
எனது படிப்பினைகள் எனக்கு கற்றுத்தந்த வழிமுறைக்கும்,
எனது சூழலின் எதிர்பார்ப்புக்கும்
தொடர்புகளே இல்லாத,
ஓரு சூனியமாக வாழ
எனக்குடன்பாடில்லை.
என்னூடான சிந்தனையைத் தீர்வுகள்
பொய்ப்படுத்தப்படலாம்;
யதார்தமில்லை என கடந்தகாலத்தோடு
ஒப்புவிக்கப்படலாம்;
பொறாமையோடு சந்தேகக்கண் கொண்டு பார்த்து தூக்கியெறியப்படலாம்,
ஏனென்றால்,
நான் நாளைய சுபீட்சத்தைப் பற்றியே பேசுகின்றேன்,
ஆனால் எனது சமூகமோ
நேற்றைய சுவாரஷ்யத்தை இழந்துவிட்டதாய் கவலைப்படுகிறது.
அறிவியலின் நிரப்பமடைந்த பகுதிகள்தான் வாழ்க்கை
வழிமுறை என்கிறது - எனது சூழல்,
அறிவியலின் நிரப்பமறந்த பகுதிகளை நான் தேடியபோது.
சிந்தனை வளர்ச்சியின் வேகமான சுழற்சிக்கு மாற்றமடையாத சோம்பேறித்தனமான - எனது சூழல்,
ஓடத்துடிக்கும் எனது கால்களை ஏளனம் செய்கிறது.
எனக்கான வாய்ப்புக்கள் எங்கையோ தூரத்தில் தெரிந்த போதும்,
யாரோ ஒருவருக்காக அருகில் இருக்கும் வாய்ப்பை என் மீது இலகுவாக திணிக்கின்றது - எனது சூழல்.
மொத்ததில்,
எனது அசைவுகளுக்கு தோள்கொடுத்து
ஊக்குவிக்காமல் தட்டித்தூங்கவைக்கும்  இந்த சூழலோடு,
ஒதுங்கிப்போய் தோற்று விடவா?? இல்லை
இந்த சூழலுக்கெதிராய்
எழுத்துநின்று வெற்றிபெறவா??

(முன்னேறத் துடிக்கும் ஒரு இளைஞனை ஊக்குவிக்காத ஒரு சமூகத்தில் ஒரு குரலாக  சில வரிகள்!!)


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.