புதியவை

திபுலாகல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.






இன்று காலை 05.00 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தங்காலையில் இருந்து மீன் ஏற்றி வந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இதனால் முன்னாள் இருந்து பயணித்த மூவரே பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

லொறி சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, அரலகங்வில பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.