புதியவை

கொக்மாதூவ முதல் இமதூவ வரையான தெற்கு அதிவேக வீதி மூடப்பட்டுள்ளது

கொக்மாதூவ முதல் இமதூவ வரையான தெற்கு அதிவேக வீதி மூடப்பட்டுள்ளது



மறு அறிவித்தல் வரை தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதூவ – இமதூவ இடையிலான பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மாத்தறை வரை போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் இமதூவ நுழைவாயிலால் வெளியேற வேண்டும் என்பதுடன், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் கொக்மாதூவ நுழைவாயிலால் வெளிளியேற வேண்டுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.