புதியவை

சேயா சதெவ்மியை கொலை செய்தது தாமே என கொண்டயாவின் மூத்த சகோதரன் ஒப்புக்கொண்டார்

சேயா சதெவ்மியை கொலை செய்தது தாமே என கொண்டயாவின் மூத்த சகோதரன் ஒப்புக்கொண்டார்

சேயா சதெவ்மி என்ற சிறுமியை தாமே கொலை செய்ததாக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கொண்டயா என்றழைக்கப்படுகின்ற துனேஷ் பிரியசாந்தவின் மூத்த சகோதரன் ஏற்றுக் கொண்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கொண்டயா மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கொண்டயா மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்
கொலையை ஏற்றுக்கொண்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலமளிக்க விரும்புவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய இன்றைய தினமே ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் சந்தேகநபரை நீதவான் ஒப்படைத்துள்ளார்.
அத்தோடு கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சேயா சதவ்மியின் கொலையை ஏற்றுக் கொண்டுள்ள கொண்டயாவின் மூத்த சகோதரனை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக ஜின் டெக் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.