மேல் மாகாண சபை உறுப்பினர் சுசில் கிந்தெல்பிட்டியவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக பெயரிடப்பட்ட ஜனநாயகக் கட்சியின் குழுவிற்கு இன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சுசில் கிந்தெல்பிட்டிய தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஒழுக்காற்று விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழு பக்கசார்பாக செயற்படும் நிலை காணப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே இந்த குழுவினரிடம் நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது எனவும் சுசில் கிந்தெல்பிட்டிய சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கமைய குறித்த ஒழுக்காற்று விசாரணைக் குழுவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று முதல் 14 நாட்கள் அமுலில் இருக்கும் வரை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாகாண சபை உறுப்பினர் சுசில் கிந்தெல்பிட்டிய சார்பில் சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்க மற்றும் மேஹரான் கரீம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.