புதியவை

சமூக இணையத்தளத்தில் நிர்வாணப்படங்களை வெளியிடுவதாக பெண்களை அச்சுறுத்திய இளைஞர் கைது

சமூக இணையத்தளத்தில் நிர்வாணப்படங்களை வெளியிடுவதாக பெண்களை அச்சுறுத்திய இளைஞர் கைது

சமூக இணையத்தளம் ஊடாக பெண்ணொருவரை ஏமாற்றியவர் வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சமூக இணையத்தளம் ஊடாக யுவதிகளின் நிழற்படங்களை எடுத்து அவற்றை ​அரை நிர்வாண மற்றும் நிர்வாண நிழற்படங்களாக மாற்றி இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்வதாகக்கூறி யுவதிகளை அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, வௌ்ளவத்தை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றினுள் யுவதியொருவருடன் இருந்தபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதி ஒருவர் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததன் பிரகாரம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரக்காப்பொல பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் போலி பேஸ்புக் கணக்கின் மூலம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணைகளில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.