புதியவை

இனிமேல் Facebook Profile picture ஆக வீடியோக்களை பதிவேற்றலாம்

இனிமேல் Facebook Profile picture ஆக வீடியோக்களை பதிவேற்றலாம்

ஹாரிபொட்டர் திரைப்படத்தில், பள்ளியின் செய்தித்தாளில் அசையும் கதாபாத்திரங்கள் வருவதைப்போல, நமது பேஸ்புக் பக்கத்திலும் (Facebook) அசையும் 7 வினாடி வீடியோக்களை புரொபைல் பிக்சராக (சுயவிவர படம்) பதிவேற்றும் வசதி தற்போது அறிமுகமாகியுள்ளது.
சுமார் ஐந்து புதிய சிறப்பான மாற்றங்களை பேஸ்புக் தமது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இவற்றை, ஏற்கனவே சில பயனாளர்களை பயன்படுத்த வைத்து முயற்சித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
10 ஆண்டுகளாக இயங்கிவரும் பேஸ்புக் ஸ்மார்ட்போனில் இதனைப் பயன்படுத்துவோருக்கும் சேர்த்து எளிமையான, இனிமையான அனுபவத்தை ஏற்படுத்தும் விதமாக About (குறிப்பு) பகுதியில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிகம் பேர் ரசித்த முந்தைய சுயவிவர படங்களை, புதிய படத்துக்கு மேலேயே இணைத்து பின் செய்யும் வசதியையும் இத்துடன் கொண்டுவந்துள்ளது.
நம்மைப் பற்றிய சுய விவரக் குறிப்பில் (Bio) 100 எழுத்துக்களைச் சேர்க்கவும், மொபைல் போனுக்கு ஏற்றவாறு, சுயவிவரப் படத்தை பக்கத்தின் நடுவில் வைக்கும் வசதியும் அறிமுகமாக உள்ளது. அத்துடன், புகைப்படங்களை வைக்கும் பகுதியை அதிகரித்துள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.