புதியவை

நன்றி கவிதை- Firoza Hussain



மூக்கை சிந்தினேன்..
வாயினால் ஓலமிட்டேன்
வார்த்தைகளாலே..
வயிறு எரிந்ததனால்
கால்கள் தடுமாற ..
கைகளாலே....

தலையை பிய்த்து 
தடுமாறினேன்...
விரலின் நகங்களை..

வெட்டாமல் கடித்தேன்..
வேதனையாலே
முகம் வெளிறி போனேன்..
உன் நாவினால் கொட்டிய..
நஞ்சு வார்த்தைகள்..

என் முழு மேனியையும்.
முடக்கி விட்டது..
உன் வார்த்தைக்கோ..
உளியின் வலிமை..

இந்த சிலையை..
இடித்து தள்ளியது..
உயிரோடு என்னை
புதைகுழிக்குள்...

அனுப்பியது..
நன்றி...என் நாவுக்கு
நன்றி சொல்ல..
மட்டுதான் தெரியும்..

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.