புதியவை

இன்ஸ்டாகிராமைக் கலக்கும் ஒன்றரை வயது மாடல் அழகி அவயா (Photos)

இன்ஸ்டாகிராமைக் கலக்கும் ஒன்றரை வயது மாடல் அழகி அவயா (Photos)
லண்டனைச் சேர்ந்த குட்டிக்குழந்தை ஒன்று இன்ஸ்டாகிராமில் மாடலாக கலக்கி வருகின்றது.
அந்தக் குழந்தைக்குச் சொந்தமாக 10,000 பவுண்ட்கள் மதிப்புள்ள ஆடைகள் உள்ளனவாம்.
அவயா ஹியூகோ என்கின்ற இந்த ஒன்றரை வயதுக் குழந்தை அணிவதற்கான உடைகள் சுமார் 500 ஆடை வடிவமைப்பாளர்களால் ஆசையாக உருவாக்கப்படுகின்றன.
இவளுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும், பெரிய நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன.
இன்னும் மழலை மொழி கூட பேசத் துவங்காத அவயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 60,000 பேர் இவரை பின் தொடர்கின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் அவயாவின் அம்மா கார்லி ஆஸ்டன்தான். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் அவயாவுக்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க மிகவும் பிடிக்குமாம்.
அதனால் மூன்று மாதக் குழந்தையாக இருந்ததிலிருந்து அவளை அலங்கரித்து எடுக்கும் புகைப்படங்களை அம்மா கார்லி இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.
இதனை நிறுவனங்கள் சில பயன்படுத்திக் கொண்டு அவர்களது மாடலாக இருக்கும் இந்த குட்டி அழகிக்கு இலவசமாக உடைகளை வழங்கி அணியவைத்து அழகு பார்க்கின்றனர்.

2D29A0E000000578-3263822-image-a-1_14442371102812D29A70B00000578-3263822-image-m-27_1444237391475 ad_183774596 ad_183774611  ad_183774815 Avaya-Hugo6 Avaya-Hugo9

ad_183774653


  No comments :

  Post a Comment

  தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

  தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

  © Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.