புதியவை

இ.பாராளுமன்ற வேட்பாளர் தில்சாதின் முயற்சியில் கஷ்மீருக்கு உரிமைகோரும் கையெழுத்து வேட்டை -umar lebbe Huthaumar

கஷ்மீர் மக்களுக்காக கண்ணீர் சிந்தும் இலங்கையர்கள் இப்போதும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை நேற்றும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் முன்னால் காணக்கூடியதாக இருந்தது.

கடந்த 25 வருடங்களாக தமது உரிமைகளை மறந்து அகதிகளாக அடிமை வாழ்க்கை வாழும் கஷ்மீர் மக்களின் தேவைகளை உடனடியாக ஐ.நா சபை தலையிட்டு தீர்வாக பெற்றுகொடுக்க வலியுறுத்தும் கையெழுத்து வேட்டை நேற்று சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் ஜும்மா தொழுகையை தொடர்ந்து ஜனாதிபதி சாரணரும்,இளைஞர் பாராளுமன்ற கல்முனை தொகுதி வேட்பாளருமான அ.ம.முகம்மது தில்சாத் தலைமையில் நடைபெற்றது.

இளைஞர்கள் முன்வந்தால் இந்த உலகில் எதை வேண்டுமென்றாலும் மாற்றியமைக்கலாம் என்பதை மீண்டும் ஒருமுறை டில்சாத் நேற்றைய தினம் நிருபித்திருந்தார்.ஜும்மாதொழுகையை தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும்,பெரியவர்களும் தமது கையெழுத்தை இட்டு கஷ்மீர் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க தமது ஆதரவை தெரிவித்தனர்.

கையெழுத்து வேட்டையை தொடர்ந்து எமது செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த இளைஞர் பாராளுமன்ற கல்முனை தொகுதி வேட்பாளர் தில்சாத் :

இந்த கையெழுத்து வேட்டையில் எதிர்பாராத விதமாக மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளது.கஷ்மீர் சகோதரர்களின் பிரச்சினைகளை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக கொண்டுவந்து அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க எங்களால் முடிந்த சக்திக்கு உட்பட்டவகையில் எங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன்வந்துள்ளோம்.

இறைவனின் நாட்டமும் நண்பர்களின் ஆதரவும் இருந்து நான் இளைஞர் பாராளுமன்றத்தில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் இந்த பிரதேசத்தில் இருக்கும் இளைஞர் யுவதிகளின் குரலாக ஒலிப்பேன்  என்பதுடன் எனது பதவியை உச்சம்வரை பிரயோகப்படுத்தி பாரிய உதவிகளை செய்ய முயற்சிப்பேன் எண்டும் தெரிவித்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.