புதியவை

நிந்தவூர் பக்ஹ்று கிராமத்தில் 12 வீடுகள் இன்று கையளிப்பு (செய்தி) முஹம்மட் ஜெலீல் ,நிந்தவூர்


நிந்தவூர் ஷக்காத் நிதியத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட வீடுகளை கையளிக்கும் இரண்டாவது நிகழ்வு அல்-ஹாஜ் பி. ஐ. எம். மேர்ஷா அவர்களின் தலமையில் இன்று 11-11-2015  புதன்கிழமை நிந்தவூர் அட்டப்பளம்-23 பிரிவு பக்ஹ்று கிராமத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு ‘’மேசி லங்கா (mercy Lanka) “அமைப்பினர் அனுசரணை வழங்கியதோடு அவ்வமைப்பின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் முக்கிய பிரமுகரான அம்பாரை மாவட்ட  "மேசி லங்கா" இணைப்பாளர் அல்-ஹாஜ் என்.எம்.எ. முஜீப் LLB, அவர்களின் பணி அளப் பெரியதென்பது குறிப்பிட்டத்தக்கது.மேலும் கட்டார் நாட்டைச் சேர்ந்த தனவந்தகரான “அஹமது யூசுப் பக்ஹ்று அவர்களினால் மொத்தமாக வழங்கப்பட்ட 32 வீடுகளில் புதிதாக அமைக்கப்பட்ட 12 வீடுகள் இன்று கையளிக்கப்பட்டன ஏற்கனவே 20 வீடுகள் கையளிக்கப்பட்டிருந்தன அத்தோடு இன்று கையளிக்கப்பட்ட 12 வீட்டு பயனாளிகளுக்கு வீடு மற்றும் வீட்டுக்குரிய சகல தளபாடங்கள் உட்பட அவர்களுக்கு தேவையான முதல் வாரத்துக்கான உணவுப் பொருட்களும்  கையளிக்கப்பட்டதோடு ஒவ்வொரு வீடு இடங்களில் மரங்களும்  நட்டுவைத்தார்.
இந்நிகழ்விலே ஷக்காத் நிதிய உறுப்பினர்களோடு இந்த திட்டத்திற்கு பொறுப்பான ஆசிய பிராந்திய அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.மேலும் ஷக்காத் நிதியத்துக்கு ஷக்காத் வழங்குகின்ற தனவந்தர்கள் மற்றும் பயனாளிகள் விசேடமாக அழைக்கப்பட்ட விருந்தினர்கள், ஊர் பிரமுகர்கள் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஆரிப் சம்சுதீன் அவர்களும்  நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் ஹாஜியானி அவர்களும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அல்-ஹாஜ் எ.எம். சுல்பிக்கார் மற்றும் மார்க்க அறியர்களும் ஏனைய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் இவ்வீட்டு திட்டத்துக்குரிய வீடுகளை கையளிப்பதற்கான பயனாளிகளை ஷக்காத் நிதிய அமைப்பினர்களால் வீடு தேவையானவர்களுக்கு விண்ணப்பங்களை சமர்பிக்ககோரியிருந்த போது விண்ணப்பங்களை சமர்பித்தவர்களிலிருந்து அந்த குடும்பங்களின் வீடுகளுக்கு ஷக்காத் அமைப்பினர்கள் நேரடியாகச் சென்று அந்த குடும்பங்களில் நிலவரம், குடும்ப அங்கத்தவர்களின் தொகை மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் சொத்து வசதிகள் சம்மந்தமான நிலைமைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் என்பனவற்றின் தகவல்களைக் கொண்டு  ஒரு புள்ளித் திட்டம் அமைக்கப்பட்டு அந்த புள்ளித் திட்டத்தின்படி அந்த பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று புள்ளிகள் வழங்கப்பட்டது.மேலும் பிரதானமாக ஷக்காத் நிதியத்தினால் வரையப்பட்ட பல நிபந்தனைக்கு உட்பட்ட வகையில் இந்த பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள்  பற்றி இரு வாரத்துக்கு முன்னர் பயனாளிகளின் பெயர் பட்டியலை நிந்தவூர் அனைத்து பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதில் குறிப்பாக தொழுகை மார்க்க விடயங்களில் கண்ணியமானவர்களுக்குதான் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.இன்னும் சிலர் இதைவிட கூடுதலான தகுதி இருந்தும் விண்ணப்பிக்காதிருந்தார்கள் அவர்களினதும் அவர்கள் வீடுகளுக்கு ஷக்காத் நிர்வாக குழு  நேரடியாகச் சென்று அவ்வாறானவர்களையும் தெரிவு செய்து அவர்களில் நிலைமைக்கேற்ப புள்ளித் திட்டத்துக்குள் உள்வாங்கி வைக்கப்பட்டிருக்கின்றது.மேலும் இதுபோன்ற திட்டங்கள் இனிவரும் காலங்களில் கிடைக்கப்பெறும்போது ஏனையோர்களுக்கும் பெயர் வரிசை முறைப்படி வழங்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.


நிந்தவூர் ஷக்காத் நிர்ணையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட வீடுகளை  கையளிக்கும் இரண்டாவது நிகழ்வு அல்-ஹாஜ் பி. ஐ. எம். மேர்ஷா அவர்களின் தலமையில் இன்று 11-11-2015  புதன்கிழமை நிந்தவூர் அட்டப்பளம்-23 பிரிவு பக்ஹ்று கிராமத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ‘’மேசி லங்கா (mercy Lanka) “அமைப்பினர் அனுசரணை வழங்கியதோடு அவ்வமைப்பின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் முக்கிய பிரமுகரான அம்பாரை மாவட்ட  "மேசி லங்கா" இணைப்பாளர் அல்-ஹாஜ் என்.எம்.எ. முஜீப் LLB, அவர்களின் பணி அளப் பெரியதென்பது குறிப்பிட்டத்தக்கது.
மேலும் கட்டார் நாட்டைச் சேர்ந்த தனவந்தகரான “அஹமது யூசுப் பக்ஹ்று அவர்களினால் மொத்தமாக வழங்கப்பட்ட 32 வீடுகளில் புதிதாக அமைக்கப்பட்ட 12 வீடுகள் இன்று கையளிக்கப்பட்டன ஏற்கனவே 20 வீடுகள் கையளிக்கப்பட்டிருந்தன அத்தோடு இன்று கையளிக்கப்பட்ட 12 வீட்டு பயனாளிகளுக்கு வீடு மற்றும் வீட்டுக்குரிய சகல தளபாடங்கள் உட்பட அவர்களுக்கு தேவையான முதல் வாரத்துக்கான உணவுப் பொருட்களும்  கையளிக்கப்பட்டதோடு ஒவ்வொரு வீடு இடங்களில் மரங்களும்  நட்டுவைத்தார்.
இந்நிகழ்விலே ஷக்காத் நிதிய உறுப்பினர்களோடு இந்த திட்டத்திற்கு பொறுப்பான ஆசிய பிராந்திய அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.
மேலும் ஷக்காத் நிதியத்துக்கு ஷக்காத் வழங்குகின்ற தனவந்தர்கள் மற்றும் பயனாளிகள் விசேடமாக அழைக்கப்பட்ட விருந்தினர்கள், ஊர் பிரமுகர்கள் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஆரிப் சம்சுதீன் அவர்களும்  நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் ஹாஜியானி அவர்களும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அல்-ஹாஜ் எ.எம். சுல்பிக்கார் மற்றும் மார்க்க அறியர்களும் ஏனைய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் இவ்வீட்டு திட்டத்துக்குரிய வீடுகளை கையளிப்பதற்கான பயனாளிகளை ஷக்காத் நிதிய அமைப்பினர்களால் வீடு தேவையானவர்களுக்கு விண்ணப்பங்களை சமர்பிக்ககோரியிருந்த போது விண்ணப்பங்களை சமர்பித்தவர்களிலிருந்து அந்த குடும்பங்களின் வீடுகளுக்கு ஷக்காத் அமைப்பினர்கள் நேரடியாகச் சென்று அந்த குடும்பங்களில் நிலவரம், குடும்ப அங்கத்தவர்களின் தொகை மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் சொத்து வசதிகள் சம்மந்தமான நிலைமைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் என்பனவற்றின் தகவல்களைக் கொண்டு  ஒரு புள்ளித் திட்டம் அமைக்கப்பட்டு அந்த புள்ளித் திட்டத்தின்படி அந்த பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று புள்ளிகள் வழங்கப்பட்டது.
மேலும் பிரதானமாக ஷக்காத் நிதியத்தினால் வரையப்பட்ட பல நிபந்தனைக்கு உட்பட்ட வகையில் இந்த பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள்  பற்றி இரு வாரத்துக்கு முன்னர் பயனாளிகளின் பெயர் பட்டியலை நிந்தவூர் அனைத்து பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதில் குறிப்பாக தொழுகை மார்க்க விடயங்களில் கண்ணியமானவர்களுக்குதான் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.
இன்னும் சிலர் இதைவிட கூடுதலான தகுதி இருந்தும் விண்ணப்பிக்காதிருந்தார்கள் அவர்களினதும் அவர்கள் வீடுகளுக்கு ஷக்காத் நிர்வாக குழு  நேரடியாகச் சென்று அவ்வாறானவர்களையும் தெரிவு செய்து அவர்களில் நிலைமைக்கேற்ப புள்ளித் திட்டத்துக்குள் உள்வாங்கி வைக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் இதுபோன்ற திட்டங்கள் இனிவரும் காலங்களில் கிடைக்கப்பெறும்போது ஏனையோர்களுக்கும் பெயர் வரிசை முறைப்படி வழங்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.