புதியவை

மொரட்டுவ, பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

மொரட்டுவ, பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டுஅத்தியவசியமான பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக மொரட்டுவ பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளிலுக்கு இன்று முற்பகல் 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 12மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மொரட்டுவ மாநாகர சபைக்குட்பட்ட இரத்மலானை, சொய்சாபுர,பாணந்துரை ,நல்லூறுவ,கிரிபேரிய ,கெசல்வத்த ,றைகம,பண்டாரகம.வெல்மில்ல,கும்புக்க,ஹொரன மற்றும் மொரந்தொடுவ ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு அமுலுபடுத்தப்படவுள்ளது .
இதற்கு மேலதிகமாக கெஸ்பேவ நகர சபைக்குட்பட்ட பொல்கஸ்ஹோவிட்ட சியம்பலாகொட ,வேத்தர,றிலாவெல, அம்பலாங்கொட,ஹெரலியாவெல ,பாலகம,தியகட மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.