புதியவை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தலைவெட்டி நரபலி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தலைவெட்டி நரபலி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான நவாஸ் கான் என்பவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கடலோர நகரமான உம்சிண்டோவில் வசித்துவந்தவர் நவாஸ் கான் (23) .
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் 2013 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகளுக்கான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் தனது நண்பர் உள்ளிட்ட மூவரால் தலை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என நவாஸ் கானின் நண்பரான தாண்டுவாக்கே துமா (21) என்பவருக்கு மந்திரவாதி ஒருவர் தெரிவித்ததாகவும் இதன் காரணமாக அவர் மாற்றுத்திறனாளியான நவாஸ் கானை நரபலி கொடுத்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனது பிரச்சினைகள் காரணமாக மந்திரவாதி ஒருவரை அணுகியதாகவும் குறித்த மந்திரவாதி, ஒரு மனிதனை நரபலி கொடுத்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று கூறியதாகவும் துமா விசாரணைகளின் போது வாக்குமூலம் அளித்துள்ளார்.
நவாஸ் கான் திறமையான விக்கெட் காப்பாளர், சிறந்த துடுப்பாட்ட வீரர் எனவும் ஒழுக்கமான வீரர் எனவும் மாற்றுத்திறனாளிகளுக்கான தென்னாபிரிக்க விளையாட்டுக் கழகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.