புதியவை

ஊரெங்கும் தீபாவளி உல்லாச தீபாவளி -கவிதை - நடராஜன் கல்பட்டு


            
                                 தெருவினிலே பிள்ளைகளும் பெரியோரும்
வெடித்திடுறார் வெடிகள்
வித விதமாய் பலவும்

வானைத் தொட்டு வெடித்திடுது அவற்றுள் சில
மாரியெனக் கொட்டுது அவற்றி லிருந்தே
பூக்கள் வண்ண வண்ணமாய்ப் பல

செவிடாகின்றன காதுகள் சிலர் வெடித்திட
ஆயிரம் பத்தாயிரம் ‘வாலா’க்கள்

நிலை புரியாது நடுங்கிப் பறக்கின்றன
இங்கு மங்கும் பறவைகள்

வண்ணப் புதுச் சேலை தனை
கட்டி மகிழ்கின்றார்
பெண்கள் பலர்

புது நகை கிடைத்ததில்
பூரித்திடு வொரு முண்டு அவர்களுள் சிலர்

தின்னக் கிடைக்கும் பலகாரங்கள்
எண்ணி மகிழ் கின்றார் சிறார்

ஊரெங்கும் தீபாவளி
உல்லாச தீபாவளி

விட்டுள் ளோர் ‘லொக்கு லொக்கு’
திணறு தது மூச்சு விட
முனகிடு தது
ஏனிந்தத் தீபாவளி
ஏனிந்தப் புகை என்றே

மெல்ல நடந்து செல்கிறது
தெருவினிலே ஒரு பெரிசு
கை கொட்டி அவர் கவனம் ஈர்க்கிறார்
அங்குள்ளோர்

என்னைப் பார்த்து ஏன் தட்டுகிறார்
கைகளை இவர்
என்ன சொல்ல நினைக்கிறார் இவர்
குழம்பியே எடுத்து வைக்கிறது
அடுத்த அடி அந்தப் பெரிசு
வெடிக்கிறது அவர் காலடியில் ஓர் வெடி
தடாலெனத் தரையில் சாய்கிறது
அந்த அதிர் வேட்டுச் செவிடு

இதைத் தான் சொன்னார்களோ
ஒருவனுக்கு பாயாசம்
மற்றவனுக் கது ஆலகால விஷம் என்று?

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.