புதியவை

சிவபிரதோஷம் - மீ.விசுவநாதன்


                  

திருநீ ரிட்டுக் கொள்கின்றேன்
  திருடன் பேரை மறைக்கின்றேன் !
கருநீ லகண்டன் நினைக்காமல்
  கறுப்புப் பணத்தில் மிதக்கின்றேன்  !
கருநா கத்தைச் சுமப்பவனின்
   கழலில் கவனம் மறக்கின்றேன் !
ஒருநா ளின்றி ஒருநாள்நான் 
   உணர்ந்து கொள்ள முயல்கின்றேன் !

கனகாம் பரமாய் மணமின்றி
   காலம் பழிக்க வாழ்கின்றேன் !
தினவால் பரமன் உனைக்கூட
   திட்டித் திட்டி எழுதுகிறேன் !
வினைவால் நீண்டு தொடராமல்
   வெட்டி விடவே தொழுகின்றேன் !
நினைவால் உன்னைத் தொடர்கின்ற
   நெஞ்சம் பெறவே விழைகின்றேன் !

( அறுசீர் அரையடி வாய்பாடு: மா,மா,காய்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.