சுடச்சுடச் சாதம் சுவாசிக்கும் தட்டு
கடுகுமணத் தக்காளி சுண்டைக்காய்க் காரம்சேர்
வற்றல் குழம்பு வழிந்தே சரிந்திடக்
குற்றும் விரல்கள் சுடும்.
இருப்புக் கரண்டியில் எண்ணைசூ டாக்கி
வரிசையாய் உட்கார்ந்த வாண்டுகள் தட்டில்
படபட வென்றொலிக்கப் பாட்டி விசிறத்
துடையில் தெறிக்கும் துளி. .
முதலில்யார் உண்டு முடிப்பதெனும் போட்டி!
மெதுவே தொடங்கி வெகுவாய்ப் பிசைந்தே
பருப்புத் தொகையல் பறங்கிக்காய் கூட்டு
விரைந்துண் டெழுந்தேன்நான் வென்று. ..
இருவர் முடித்து எனைப்பின் தொடர
ஒருவனே இன்னமும் உட்கார்ந் திருக்கப்பின்
கட்டில் கரம்கழுவிக் கைமழை தூறினேன்
கட்டைக் கடைசிநீ தான்! .
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.