புதியவை

பாலைவனத்தில் ஒரு பணமரம்.(கவிதை) அசார்தீன் ரமீஸ் - புத்தளம், இலங்கை

பெற்றகடன் தீர்க்க என்னை
பெற்றவன் பட்ட கடன் தீர்க்க...
வாழை போல வளர்த்து நிக்கிறாள் ஒருத்தி
என்னை வாழவைப்பான் என் அண்ணன் என்று..
பட்டபடிப்பு படிக்க பணமில்லை,
என் தம்பி கேட்டு மறுக்க மனமில்லை..
பாலைவனத்தில் பணமரம் தேடி
மத்தியகிழக்கிற்கு படையெடுக்கும்
ஆண்மகனில் நானும் ஒருவன்...

வீட்டுக் கடன் முடிந்தது, தங்கை திருமணம் முடிந்தது
பட்டப்படிப்பு முடிந்தது, கண்ணாடியில் எல்லாம் நரையாய்
தெரிந்தது...
குடும்ப பாரம் சுமந்து, இளமை இனிமை துறந்து,
பணம் உழைக்கும் நானும் பாலைவத்தில் ஒரு பணமரம் தான்...!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.