புதியவை

தீபப் பெருவிழா போற்றுவோம் (கவிதை )-பசுபதி, கனடாதெய்வக் கண்ணனைக் கொண்டாடும் – இந்தத்
தீபா வளித்திரு நாளினிலே
பொய்மை இருட்டினைப் போக்கிடுவோம் – நம்
புந்தி எனுமகல் விளக்கெடுத்தே !

குளிக்கும் நீரினில் கங்கையென – அன்பு
கொடுக்கும் நற்குணம் பொங்குகவே !
களிப்பைப் பகிர்ந்திடும் நன்னாளில் – நாம்
அளிப்போம் உதவியை வறியவர்க்கே!

அரக்கன் நரகனின் வதத்தினிலே – உதவி
அளித்த பாமையை மறப்போமா?
கருணை காட்டிடும் தாய்க்குலமும் – தீக்
கயமை அழிப்பதில் முன்வரட்டும் !

வெட்டிச் செலவுகள் தவிர்த்திடுவோம் – இன்று
வெடிப்போம் சினத்தினைப் பட்டாசாய்!
நட்பின் சுடர்களைத் தூண்டிடுவோம் – இந்
நாட்டின் பெருவிழாப் போற்றிடுவோம் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.