புதியவை

தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்  கைவிடப்பட்டது
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள் ஆரம்பித்திருந்த உண்ணாவிரதத்தை இன்று (17) காலை கைவிட்டுள்ளனர்.
இவர்கள் அரசாங்கத்திற்கு பல கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில் 39 தமிழ் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 11 ஆம் திகதி 31 பேருக்கும் நேற்று 8 பேருக்கும் பிணை வழங்கப்ப்டடது.
இதனடிப்படையில் நேற்றைய தினம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி. எம் சுவாமிநாதன் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க , சிறைச்சாலை ஆணையாளர் ,பொலிஸார் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் , அனைவரும் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தையொன்றை நடத்தினர்.
இதில், குறிப்பாக புனர்வாழ்வு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்து 99 கைதிகள் கடிதம் அனுப்பியமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு வழங்கப்படக்கூடிய, குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கும் இந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டது.
நேற்றைய தினம் அமைச்சர் டிம் சுவாமிநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்க்கைதிகளுடன் கலந்துரையாடி அரசாங்கத்தின் தீர்மானத்தை அவர்களுக்கு அறிவித்தனர்.
இதனடிப்படையில் தமது உண்ணாவிரதத்தை கைவிடுவிடுவதாக அவர்கள் நேற்று (16) இரவு அறிவித்ததற்கமைய இன்று (17) உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.