புதியவை

தடாகத்தின் கவினெழில் கௌரவத்தைப் பெறுகின்றார் கவிதாயினி சக்தி ஜோதி
தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு -இலங்கை
ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை, பன்முக ஆற்றல் கொண்டவர்களை  இனம் கண்டு மாதாமாதம் (கவினெழில் விருது  )
கொடுத்து கௌரவித்து வருகின்றார்கள்
அந்த வரிசையில்  இது வரை
01- பவள சங்கரி திருநாவுக்கரசு
02 -கல்கி சுப்ரமணியம்
03 -ராசாத்தி சல்மா மலிக்
04 -மைதிலி நாராயணன்( ஷைலஜா)
05 - ஜி விஜய பத்மா
o6 -சந்திரா இராவீந்திரன்
07- பேராசிரியை சா. நசீமா பானு
ஆகியோர் பெற்று உள்ளார்கள்
இந்த மாதத்திற்கான தடாகத்தின்  கவினெழில்கௌரவத்தைப் பெறுகின்றார்  கவிதாயினி சக்தி ஜோதி

உலக செம் மொழிகளில் தனிச் சிறப்புடையது தமிழ் மொழி
உலகில் வாழும்தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய் , உணர்வாய் உழைப்பாய் ,உழைப்பின் விளைவாய் கண்டு உணர்ந்து வாழ்பவர்கள்
உலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு
அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது
அவர்களின்எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல
செயல்களின் பரிணாம வளர்ச்சியுமாகும்

"கவினுறு கலைகள் வளர்ப்போம்" எனும் உயர்வான இலட்(ச்)சியத்தோடு  - தமிழ் பேசும் உள்ளங்களை (பன்முக ஆற்றல் கொண்டபெண்களை  ) இன, மத, வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று கௌரவித்து வருக்கின்றது
தடாகம்  கலை இலக்கிய வட்டம் இது அரசியல் சார்பற்ற ஓர் அமைப்பாகும்.

இந்திய மண்ணின்  பன்முக ஆற்றல் கொண்ட  சகோதரி சக்தி ஜோதி  தமிழில் அறியப்படுகிற பெண் கவிஞர்களில் ஒருவர்.
 இந்தியாவில்- தேனி மாவட்டத்தில் முல்லையாற்றின் ஈரம் படர்ந்திருக்கும் அனுமந்தன்பட்டி கிராமத்தில்பாண்டியன் , சிரோன்மணி . தம்பதிகளின் புதல்வியாக மார்ச் மாதம் 15ம் திகதி 1972ல் பிறந்தார் இவருக்கு ஒரு ஆண் சகோதரனும் 3பெண் சகோதரிகளும் உடன்பிறப்புக்கள்  

தற்போது  மருதாநதி கரையின் அய்யம்பாளையத்தில் வசிக்கிறார் சக்தி ஜோதி.

கணவர் : சக்திவேல்  குழந்தைகள் : திலீப் குமார் , காவியா

 சக்தி ஜோதி தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார் . சங்க இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் .

நீ ர்செறிவு மேலாண்மையைக் கவனப்படுத்தி செயல்படுகிற ,

இவர் விவசாயம் மற்றும் பெண் கல்வியை மையப்படுத்தி சமூகப் பணியாளராக இயங்கி வருகிறார்.

இதற்காக ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார நலன் அறக்கட்டளை என்கிற நிறுவனத்தைத் தொடங்கி செயல்படுகிறார்.

சீ னா , இலங்கை , மலேசியா , சிங்கப்பூர் , அமெரிக்கா ,தாய்லாந்து , இஸ்ரேல் , போர்ச்சுக்கல்.போன்ற நாடுகளுக்கு பணிநிமித்தமாக பயணம் செய்துள்ளார்

இவரது கவிதை தொகுதிகள் :
நிலம் புகும் சொற்கள்    - 2008
கடலோடு இசைத்தல்       - 2009
எனக்கான ஆகாயம்     - 2010
காற்றில் மிதக்கும் நீலம்  - 2011
தீ உறங்கும் காடு          - 2012
இந்திய அரசின் தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் மூலம், தமிழ்நாட்டின் சிறந்த சமூக சேவகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய சீனா நல்லுறவு தூதுக் குழுவில் தமிழகத்தின் சார்பாக சீனாவிற்குச் சென்று வந்துள்ளார்

வலைத்தளம்
www.sakthijothi.wordpress.com
www.sakthijothipoet.blogspot.com

ஆன் பெண் பன்முக ஆற்றல் கொண்டவர்கள் தமது முழு விபரங்களை இந்த விருதுக்காகஅனுப்பி வைக்கலாம்

அனுப்பவேண்டிய முகவரி  sk .risvi @gmail .com

இவர். மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்து, திறமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருளை வேண்டி .
இதயம் பிழிந்து வாழ்த்துகிறேன்.

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

அமைப்பாளர்

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச
 பன்னாட்டு அமைப்பு -இலங்கை 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.