புதியவை

நல்லோர்க்குப் பெய்யும் மழை (கவிதை) (மீ.விசுவநாதன்)பொழிகிறது பொழிகிறது வானம்
 புதுமையுடன் சிலிர்க்கிறது பூமி !
வழிகிறது வழிகிறது இன்பம்
  வழியெங்கும் வசந்தத்தின் கோலம் !
கழிகிறது கழிகிறது பாவம்
  கவலையினி கிழிபட்டு மாயும்!
அழிகிறது அழிகிறது தீமை
  அருளோடு ஒளிர்கிறது தீபம் !

வளர்கிறது வளர்கிறது அன்பு
  வருவோர்கள் பெறுவோர்கள் கொண்டு !
தளர்கிறது தளர்கிறது கோபம்
  தவசீலர் கண்பார்த்த நேரம் !
குளிர்கிறது குளிர்கிறது காலம்
  குணநலன்கள் கோபுரமாய்க் காணும் !
தளிர்வருது தளிர்வருது காண்பீர்
  பயிறோங்கி பசிதீரும் வாரீர் !

(அறுசீர் விருத்தம்:வாய்பாடு: காய்,காய்தேமா)

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.