புதியவை

சின்ன வயதில் சேமிப்பு - ரமணி
(அளவியல் இன்னிசை வெண்பா

ஓட்டையாய்க் காலணா ஒவ்வோர் விரலிலும்
பாட்டுடன் தாளம் தகரடப் பாவிலே
மெட்டியாய்க் கால்விரல் போட்டேன் - தலையிலே
குட்டுவாங் கிக்கண் குளம்......!!

நயாபைசாச் சட்டை அணிந்தே நடந்தோம்
தயாராய்க்கை பற்றியே தந்தையார் தந்ததைக்
கண்ணிலே ஒற்றிக் கரத்தால் வருடிமண்
உண்டியலில் சேர்த்தோம் உடன்.....!!!!

உண்டியல்வாய் முட்ட உடைத்தே தகப்பனார்
கண்படும் காசுகள் கட்டித் தொகுப்பார்
வகைக்கொரு பத்தாய் வளர்ந்துநிற்கும் தூணாய்த்
தகைத்திடுவார் காகிதத் தால். ...!!

தூண்களாய் நாணயம் தூங்குமோர் பெட்டியில்
நீண்டநாள் ஆக நெகிழ்த்தியே தந்தை
பலவகை யான பரிசுகள் ஆக்கக்
குலவும் மனத்திலே கூத்து. .....!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.