புதியவை

இனியொரு மாரி இவளுக்கு வேண்டாம் - மேகலைவன் மாரி மழையோடு மதம் பிடித்த காற்றடிக்க;
ஓலைக்  குடிசையிலே தாழ்வாரம் தஞசமென்று
ஓரம் நனைந்தபடி ஓராடும் குட்டியொன்றும்;
ஓராட்டக்  கட்டிவிட்ட ஏணையிலே
ஒரு வயதுப் பிள்ளையொன்றும்;
ஒழுக்கொதுங்கி இருக்குதென்று பெருமூச்சு விட்டபடி,
நேற்றிரவு மூத்தமகள் படித்து வைத்த புத்தகத்தை
ஈரம் படுமுன்பே இருந்த இடம் மாற்றிவிட்டு,
இருந்த நால் பாத்திரத்தில் பெருமொழுக்கு ஏந்தவைத்து;
மீதி நூரொழுக்குக்கும்  பணிவிடைகள் செய்துகொண்டு
முன்வாசல் வழியாக ஒழுக்கு வெள்ளம் விரட்டயிலே;
ஓரத்தட்டியிலே மாட்டிவைத்த கணவன படம்
மழை பட்டு நனைந்திருக்க;
பதறிப் படம் கழற்றி எடுத்து மார்பணைக்கையிலே
அவள் கண்கள் பொழிந்த மழை
மாரி மழை பெரிதாமோ!

வறுமையுடன் தவிப்பே வாழ்கையின்
நியதி என்றால்!
இனியொரு மாரி இவளுக்கு வேண்டாம்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.