புதியவை

சிவபிரதோஷம் -கவிதை -(மீ.விசுவநாதன்)


                  


மழையில் நனைந்தால் சிவனே
   மனதில் உன்னை நினைப்பேன் !
அழைப்பேன் ருத்ரம் சொல்லி
   அதிலும் குளித்து மகிழ்வேன் !
உழைக்கும் போதும் சிவனே
  ஒளியாய் ஒன்றிப் பணிவேன்
பிழைப்புக் காக உன்தாள்
  பிடிக்க மாட்டேன் சிவனே !

என்னை நினைக்கும் உன்னை
  என்னுள் வைத்தேன் நன்றாய்
முன்னை வினையின் தொடரை 
  முடித்து வைப்பாய் சிவனே !
தன்னை உணர்ந்த நிலையை
  தருவாய் எனக்கு என்றே
சென்னி மேலே உன்தாள்
   சிந்தை செய்வேன் சிவனே !

( அரையடி வாய்பாடு: மா,மா,மா  )

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.