புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற கவிதை
விவசாயின் விடியல் என்று..?

ஊர் நிலை ஓதிடும்உண்மை இதை
உங்கள் முன் கூறிடும்என் கவிதை 
வாய்க்கால் வரப்பு வயல் வழிகள்
வாய்க்கப் பெற்ற நில வெளிகள்
நெல்லு,தென்னை,மா, பலா வாழை
வில்லு நீரால் செழிக்கும் சோலை
கரும்பும் கூட விரும்பும் படியாய்
நாவில் இனிக்கும் சுவையின் வடிவாய்

ஆயினும் உழவன் அழுதிடும் நிலை
ஆனது இங்கே விளைச்சலின் விலை
பாடு படுபவன் பழுத்திடும் இலை
ஆடும் கழித்திடும் அழுகிய குழை
தேடி யாருமே உதவிட இல்லை
வாடிப் போகுதுவாழ்வதன் எல்லை

பூமியை தாய்போல் பார்த்திடும் சாதி
புவியில் இருப்பது கிராமத்தில் பாதி
ஏர்தனை பிடித்த ஏழையின் விதி
எழுதி முடிப்பதோ தரகர்கள் கெதி
விவசாயிதான் உழைப்பதன் ஆதி
விளைந்ததை விற்க எங்கடா நீதி

ஈரத்தை பார்த்தால் இது நெல்லா கேட்கிறான்
இரக்கமே இன்றி இடுவம்பாய் தாக்குறான்
நிறமதை கூர்ந்து நிறுவையில் கழிக்கிறான்
நிறையது குறைவா பதெரென முழிக்கிறான்
விலையதை கழித்து கூட்டலில் குறிக்கிறான்-ஏழை
வியர்வையில் குளித்து உயரத்தில் ஜொலிக்கிறான்

ஏழையின் பிழைப்பது தோலென தேயிது
எட்டப்பர் நிலைப்பது மாடியாய் உயருது
சட்டத்தை மாற்றாத சபைகளும் பெருகுது
சளைக்காது உழைப்பவன் வயிறது எரியிது
ஊணை தருபவன் மண்ணென போனான்
உறுஞ்சி பெறுபவன் மன்னனாய் ஆனான்
ஏனடா மானிடா இந்நிலை தொடருது
இதற்கொரு விடிவு நாள் எப்படா விடிவது?!


கவியருவி சான்றிதழையும் பட்டத்தையும் பெறுகின்றார் ரோஷான் ஏ.ஜிப்ரி.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.