புதியவை

பணம் - சி. அருள் ஜோசப் ராஜ்
பத்தாத பணம்பத்தும்  செய்யும் என்பார் !
  பணத்தாலே சாதித்து விடலாம் என்பார் !
பத்துதொழில் பணமில்லாதவர்  சொல்வார்செய்வார் !
  பணம்செய்ய பறந்துபோவார் நாட்டை விட்டும்!
பத்துபண்பும் மறந்துபோவார் !  நாட்டில்  என்றும்
  பகட்டாக வாழ்ந்திடவே  விருப்பம் கொள்வார் !
பத்துபொருள் சேர்த்திடவே சேமிப்பும் செய்வார் !
  பணமதிலே  நம்பிக்கை தானே கொள்வார் !


பணத்தாலே பதவிக்கு  வந்தி டுவார்
  பதவிக்கு வந்தாலோ  பணத்தா சையே
குணத்தாலே கொண்டிடுவார் !  செலவு  செய்ய
  குறுக்குவழி வரவுகொள்வார் நெடுநாள் பெற்ற
மணமொத்த மரியாதை இழந்து நிற்பார் !
  மனிதரென்ற  மாண்பு நீங்கி  விலங்காய் இருப்பார் !
பணமென்ப தென்னவென்று அறிவார் இன்று !
   பண்டமாற்று முறைநீங்க  வந்த ஒன்று !


மரியாதைப்  பெற்றுஇன்று  மதிப்பு கூட்டும்
  மகத்தான காகிதமாய்  உருவெடுத்து
வேரின்றி விழுதாகி தழக்க,  வட்டி
  வேண்டிகடன் ஈவார்தம்  பணத்தைமெல்ல
வரியின்றி  வருமானம்  பெறுவார் நன்று !
  வணக்கமும்  பூசையும்நம் பணத்திற் குண்டு !
நரிகுணத்தார்  கள்ளநோட்டு அச்சடித்து
  நம்பொருளா தாரம்சீர்  குலைப்பார்!  எங்கும் 


கவைமனதார்  பணத்திற்கே கொலை செய்வார் !
  கருவூலம் வங்கியென்று  களவு செய்வார் !
இவையெல்லாம்  போதாதென்றே  இணைந்த  பல்லோர்,
  இணையதள  பணவிற்பனையை  நாட்டில்,
சேவையாகத் தொடங்கிவிட்டார்  என்ற செய்தி
  சுதந்திர  இந்தியாவைப்   பிளந்திடவே
தேவையின் பயணத்தில்நம்    பணமே  இன்று
  தேடலைத்தொ டங்கநாமும் பணத்தைத்  தேடுவோம்
                                        

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.