புதியவை

புதிதாய் புதினாமாய் வா புதிய விடியலே - மு.யாகூப் அலி






நேற்று போல்
இன்று விடிந்தாய்
நன்று புதிய விடியலே.


இன்று விடிந்தது போல்
நாளை விடியலைத் தர
வேண்டுகிறேன் புதிய விடியலே.

பசி பட்டினிகளை
கடந்த காலம் தந்தது..அதை
உடைத்து வா புதிய விடியலே.

இயற்கை சீற்றங்கள்
இனிமேல் வேண்டாம்
இயற்கையாய் வா புதிய விடியலே.

திராவிட ஆட்சி நீக்கி
மனிதநேய ஆட்சி மலர
மாண்பே வா புதிய விடியலே.

சாதி வெறி நீங்கி
சமத்துவம் போற்ற
சிறந்து வா புதிய விடியலே.

மதக்கலவரம் இல்லாமல்
மனித குலம் வாழ
மடை திறந்து வா புதிய விடியலே!

மாற்றம் காண
மாறு பட்டு வந்து விடு
மாண்புமிகு புதிய விடியலே.

இன்னும் ஏழை ஏழையாக
இப்பூமியில் புறக்கணிக்க படுகிறார்கள்
இனி அதை மாற்ற வா புதிய விடியலே.

தற்க்கொலை செய்யா
விவசாய வாழ்க்கையை
இவ்வருடம் தா புதிய விடியலே!

வரண் அமைந்தாலும்
வரதட்ச்சனையால் வாடும்
கன்னிகளுக்கு வாழ்வு தா புதிய விடியலே.

இன்னும் நாடு திரும்பாது உழைக்கும்
இந்திய உறவுகளின் சுமைகளை
சுகமாக்கி வை புதிய விடியலே...

சம்பாரித்த பணமெல்லாம்
சந்தோசம் காணும் வரை
நோய்நொடிகளை நீக்கி வா புதிய விடியலே.

கடைசி வரை
பெற்றோர்களுடன் வாழும் படி
வாழ்க்கையை தா புதிய விடியலே.

ஒருத்தனுக்கு ஒருத்தியாய்
ஒவ்வொரு குடும்பத்திலும் அமைந்திட
ஒழுக்கத்தை தா புதிய விடியலே.

இவைகளை ...இறைவன் அருளால்
இனிதாய் இப்பூமியில் ..யாவருக்கும்
கிடைத்திட வா புதிய விடியலே.

நிலா முற்றம் போல்
இன்னும் தமிழுக்கு பல
தேடல்களை தா புதிய விடியலே!

புதிதாய் புதினாமாய் வா
புதிய விடியலே!

நிலா முற்றத்திற்க்கா:-
"சூரியக்கவி தீபம்"
மு.யாகூப் அலி.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.