புதியவை

எய்ட்ஸ் ஓர் பார்வை - ஸிமாரா அலி


"எய்ட்ஸ் ஓர் பார்வை " விழிப்புணர்வுஎனப்படுவது எய்ட்சு நோய் பரவலைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த நோய் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஊடகங்கள், விழிப்புணர்வு அமைப்புகள் மூலம் ஏற்படுத்துதலாகும்.அதற்கான்
நாள் ஒதுக்குவதைவிட நாம் அதை தெளிவாக தெரிந்திருப்பது முக்கியம்.நாகரிகம் என்ற போர்வையில் நம் சமூகம் அழிவின் பாதையில் வேகமாக செல்கிறது .அதைத்தடுக்க முடிந்தவரை அதைப்பற்றி பற்றி விரிவாக தெரிந்திருப்ப்து மிக முக்கியம்.எய்ட்ஸ் ஒரு தீ நுண்மத்தால் (வைரசால்) பரவும் நோய்

ஜூன் 5, 1981அன்றுஅமெரிக்காவைச் சேர்ந்த நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. ஆண்ஓரினச்சேர்க்கை கொண்டிருந்த 5 நபர்களிடம் ஒரு அரிய வகை நிமோனியாவைக் கண்டறிந்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையே எய்ட்ஸ் கண்டறியப்பட்டதற்கான முதல் ஆவணமாகும். முதலில் எய்ட்ஸ்என்பது ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைப்பாடு என்று அழைக்கப்பட்டது.ஓரினச்சேர்க்கை புற்று நோய்என்றும் இது ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. இவ்வாறாக எயிட்ஸ் நோய் 1981ம் ஆண்டிலேயே அறியப்பட்ட போதிலும், அதை உண்டாக்கும் வைரஸ் கிருமி 1983ம் ஆண்டிலேயே இனங்காணப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பாஸ்டர் விஞ்ஞானக் கூடத்தில் (Institute Pasteur) பிரான்சு நாட்டு விஞ்ஞானிலூக் மொண்டிக்கயர் எனும் விஞ்ஞானியால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது இது L.A.V வைரஸ் (Lymphadenopathy associated Virus) என்று பெயரிடப்பட்டது. 1984 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள'''தேசிய புற்று நோய் நிறுவனம்'''இக்கிருமிதான் எயிட்ஸ் நோயை உண்டாக்குகிறது என்பதை உறுதிப்படுத்தியது. அப்பொழுது இதற்கு H.I.V – type III வைரஸ் ( Human T-Iymphotrophic Virus type III) என்று பெயரிடப்பட்டது. 1986 ம் ஆண்டில் தான் தற்போது பயன்படுத்தப்படும் HIV வைரஸ் (Human (மானுட) I mmuno deficiency (நீர்ப் பீடனக் குறைபாடு.) Virus (வைரசு)) என்ற பெயர் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

HIV வைரஸின் இரண்டு உப பிரிவுகள் இருப்பதாக இப்பொழுது நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதை HIV-I என்றும், பின்பு மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய உபபிரிவை HIV – II என அழைக்கிறார்கள்.


சில புள்ளிவிபரம்…

1.WHO-வின் 2010 அறிக்கையின் படி அமெரிக்காவில் 1.3 மில்லியன் மக்கள் எய்ட்சினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கை, தகாத பாலியல் உறவு மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஐரோப்பாவில் 2.3 மில்லியன் மக்கள் எயிட்சினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள்.

3. ஆசியாவில் சுமார் 5 மில்லியன் மக்கள் எயிட்சினால் பாதிப்புற்றுள்ளார்கள்.

4. அதே நேரம் 2011 ஆண்டின் புள்ளி விபரப்படி WHO- ஆல் பாதிக்கப்பட்ட உலகமக்கள் தொகை 34 மில்லியன் என்பது றுர்ழு வினது தகவலாகும்.


எய்ட்ஸ் என்ற சொல்லின் பொருள் :

Acquired - A ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுகொள்வது

Immune - I உடலின் எதிர்ப்பு சக்தி

Deficiency - D குறைத்துவிடுதல்

Syndrome - S பல நோய்களின் கூட்டுத் தொகுப்பு

இந்நோய் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது. 1986 ஆம் ஆண்டு நம் நாட்டில் சென்னையில் எய்ட்ஸ் நோய் அறிகுறி உள்ளவர்கள் இருப்பதை அறிந்து நமக்கெல்லாம் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டது. நம் நாட்டில் இதுவரை பல லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வர்களின் மிக அதிகமானவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ளனர்.

எய்ட்ஸ் நோய் வருவது எப்படி ?

எய்ட்ஸ் நோய் வருவது காரணமாக இருக்கும் கிருமியின் பெயர் எச்.ஐ.வி. இக்கிருமி மனித உடலில் புகுந்து விட்டால் அந்த உடல் இயல்பாக பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாத காரணத்தால் காசநோய், புற்றுநோய், மூளைக்காய்ச்சல், கட்டுப்படாத வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்களுக்கு உட்பட்டு மனிதன் மரணத்திற்கு தள்ளப்படுகிறான்.

எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் :

உடல் எடை மிக வேகமாக குறைதல், ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல், ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் இருமல், ஒரு மாதத்திற்குமேல் தொடர்ந்து வயிற்றுப்போக்கு, உடல் அரிப்புடன் கூடிய தோல்வியாதி ஆகியவை ஆகும். இத்தொற்றுநோயை அறிய இரத்தப்பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும்.

இந்த நோய் வந்தவர்கள் தம்மை மட்டுமின்றி தன் சந்ததியினரையும் அழிவின் பாதையில் இட்டுச்செல்வது மிகப்பெரிய கொடுமை.டிசம்பர் 1ஆம் திகதியல்ல வருடம் முழுதும் விழிப்புணர்வை நாம் நம்மை சார்ந்தவர்களுக்கு ஏற்ப்டுத்துவோம்.


ன்றி..!
ஸிமாரா அலி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.