புதியவை

நவம்பர் மாதம் நடைபெற்ற கவிதைப் போட்டியில் சிறப்புக் கவிதைக்கான கவினெழி சான்றிதழைப் பெறுகின்றார் எம்.ஐ.எம் அஷ்;ரப்,


பற்றியெரியும் பொறாமை

சுயநலத்தின் மிகையே 
பொறாமைத் தீய்க்கு அடிப்படை 
அனைத்தும் என்னிடம் 

உள்ளதென்ற போதும் 
இறைவன் விதித்ததில்
குறைகாண முடியாத போதும் 
படைத்தவன் பார்த்துப் பார்த்து
அளந்திருக்கிறான் எனக்காக
என்ற நிறைவில்லை 
மற்றவனைப் பார்த்தொரு 
பெருமூச்சு விடாவிட்டால் 
நிம்மதி வராமல் போகிறது 

வேண்டும் பொறாமை
அவன் கற்று உயர்ந்திருக்கிறானே 
அதுபோல் உருவாகி வரவேண்டும்
கல்வியில் உயரவேண்டும் 
உழைப்பில் உயரவேண்டும் என
என்னையும் புவி 
அவ்வாறு காணவேண்டுமென 
வேண்டும் அவா
ஆகாது ஒருபோதும்
அவன் முயற்சியைப் பாழாக்கி 
நான் வாழவேண்டுமென்பது 

அவதூறு கோள் புறம் 
இட்டுக் கட்டுவதெல்லாம் 
கிளைகள் இதற்கு 
நற்பெயருக்கு பங்கமூட்டி 
தலைகுனிவை உருவாக்கி 
உருப்படாமல் ஆக்கிவிட்டால் 
அத்தனை திருப்தி இதற்கு 
நெருப்பு 
விறகை எரிப்பதுபோல் 
தேடிய நண்மையெல்லாம் 
அழித்துவிடும் 
இந்தப் பொறாமை

அண்டை அயலவரைப் பார்த்து 
தன்னவரை நச்சரித்து 
தன்வாழ்வை இழந்தவர் 
தரணியில் எத்தனைபேர் 
அந்த வாகனம் 
அதுபோல் ஆடைஅணி 
அவ்வாறு மாடிமனை 
அதுபோலொரு செல்வாக்கு 
எனக்கும் தேவையென்றால் 
அது கிடைக்குமோ இல்;லையோ 
முடிவாய்
மீதமாவது பொறாமையொன்றே 

ஏற்றம் இறக்கமென 
அனைத்துத் தரப்பும் தேவை 
இவ்வுலகு வாழ 
கிடைத்ததில் திருப்தியுற்று
அதிலொரு ஆனந்தம் 
காண்போரே உயர்வானோர்
நான்வாழ இது போதும் 
என்பதொரு வரையறையாகி 
வேரூன்றி விருட்சமானால்
காணாமல்போகும் 
பற்றியெரியும் பொறாமை

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.