புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்ற கவிதை
கைக்கூலிகள்..!
==============

காசுக்காய்
எதையும் செய்யும்
காவாலிகள்..!

'பசை' உள்ளபோது
ஒட்டி உறவாடும்
பச்சோந்திகள்..!

உண்ட வீட்டுக்கே
ஊறு விளைவிக்கும்
பெருச்சாளிகள்..!

கைக்கூலிகள்,
பசுத்தோல் போர்த்திய
புலிகள்,
கொடிய விஷமுள்ள
விஷப்பூச்சிகள்..!

பார்த்தால் பரமசாது,
பழகினால் போதும்
கொஞ்சம் கொஞ்சமாய் - தம்
சுயரூபங்களைக் காட்டுவர்..!

பாம்புக்குப் பால் வார்ப்பதும்
இவர்களளுடன்
சேர்ந்து உறவாடுவதும் ஒன்று.

கொடுக்கு முன்னே
வெடுக்கென
பிடுங்கித் தின்னும்
பிணந் திண்ணிகள்..!

பொய்களின் கூடாரம்,
வதந்திகளின் தாயகம்..!

கூடும் முகில் கண்டு
ஆடும் மயில்போல்
கண்ணில் ஆயிரங்களைக்
காட்டினால் போதும்,
சலத்தையும் குடிப்பர் - மனித
மலத்தையும் உண்பர்..!

உழைத்து வாழ வக்கில்லாத
உருப்படியற்ற
உதவாக்கரைகள்..!

கொஞ்சம்கூட
மானமற்ற
நாணமற்ற
ஈனப் பிறவிகள்..!

தமக்கென ஏதும்
இலட்சிய வேலிகளற்ற
சமூகக் கேலிக்குள்ளாகும்
கைக்கூலிகள்,
சமூகச் சாபக்கேடுகள்..!

நெஞ்சில் ஈரமற்ற
சூடு சுரணையற்ற
எதற்கும் சோரம்போன
சோம்பேறிப் பொறம்போக்குகள்..!

அடுத்தவர் வயிற்றலடித்து
அண்டிப் பிழைக்கும்
அன்னக்காவடிகள்,
பிறர் வயிற்றெரிச்சலால்
வளர்ந்த
நச்சுத் தாவரங்கள்..!

தன்னலமொன்றையே
தன்னகத்தேகொண்ட
தவறுகளின் மொத்தத் தொகுப்பு - இந்த
தறுதலைகள்..!


 கவின் கலை பட்டமும்  சான்றிதழும்  பெறுகின்றார் 
- எஸ்ஸெம் நிலாம் -

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.