புதியவை

இலங்கை வர்த்தக சங்க கிளை ஒன்றை கல்முனையில் அமைக்குமாறு NDPHR கோரிக்கை



இலங்கையில் இயங்கும் இலங்கை வர்த்தக சங்கம் (chamber of commerce) நிர்வனத்தின் கிளை ஒன்றை கல்முனையில் அமைப்பதன் மூலம் அதனால் அவ் நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படும்  பலவிதமான பயன்களைப் பெறமுடியும் எனக் கருதுவதினால் ,இதன் கிளை ஒன்றினை கல்முனைத் தொகுதியில் அமைப்பதுக்கான கோரிக்கை ஒன்றை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் கைத்தொழில்வணிக அமைச்சர்றிசாத் பதியுதீன் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டுவரவுள்ளார் .

இந்த நிர்வனத்தின் மூலம் இப் பகுதி வர்த்தக சமூகம் சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதயிலும் அவர்களது வர்த்தக நடவடிக்கைகளை அகல விரிக்க நிறைய சந்தர்பங்கள் உண்டு எனவும்,உள்ளுர் உற்பத்தியாலார்கள்வர்த்தக சமுகத்தினர்சர்வதேச தரத்திற்கு தமது வியாபாரத்தை மேற் கொள்ளுவதற்கும் உலகலாவிய ரீதியில் நவீன தொழில் நுட்ப முறையில் இன்டனெட் மற்றும் வெப் வலையமைப்பின் ஊடாக தமது வியாபார முறைமையை முன்னெடுத்துச் செல்வதற்கும் பல்வேறு நாடுகளின் வர்த்தக சமூகத்தினரோடு தமது வியாபார தொடர்புகளை மேற்கொள்வதற்கும் சிறந்ததொரு வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கும் முடியும்  எனவும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் கூறினார்கள்     

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.