புதியவை

அம்பாறை மாவட்டத்தில் பங்குச் சந்தை (SHARE MARKET ) வணிகம் பற்றி தேசிய ஜனநாயாக மனித உரிமைகள் கட்சி அறிமுகப் படுத்தும்அம்பாறை மாவட்டத்தில் பங்குச் சந்தை (SHARE MARKET ) வணிகம் பற்றி தேசிய ஜனநாயாக மனித உரிமைகள் கட்சி அறிமுகப் படுத்தும் நோக்குடன் அக் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் ஒரு கருத்து அரங்கு ஒன்றை மிக விரைவில் நடத்தவுள்ளார். 

பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். ஆனால், காய்கறிக்கோ, மற்ற பொருட்களுக்கோ தேவைப்படுவது போல, பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இருப்பிடம்(Physical presence) தேவையில்லை. கணிணி மூலமாகவும், முகவர்கள்(Brokers) மூலமாகவும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இன்றைய நிலையில்  உலகப் பொருளாதாரம் பங்குச்சந்தையைப் பெரும்பாலும் சார்ந்துள்ளது என்றால் அது மிகையன்று. எனவே அம்பாறை மாவட்ட மக்களும் இதனில் இணைந்து தங்களது பணத்தினை முதலீடு செய்து  பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் இதை அறிமுகப் படுத்தவுள்ளார் 

தனியார் பங்கு நிறுவனங்கள் காலப்போக்கில் மிகவும் விரிவாக்கம் பெறும்பொழுது அல்லது ஏற்கனவே சந்தையில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் ஒரு கிளை/புதிய கம்பெனி துவக்கும்பொழுது, பொதுப் பங்கு நிறுவனம் உருவாகிறது. இத்தகைய நிறுவனங்கள் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தமது நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றன.வேறு விதமாகச் சொல்ல வேண்டுமாயின், பொதுமக்கள் பங்குதாரர்களாக, மூலதனத்திற்கும், நிறுவனத்தின் லாப நட்டத்திற்கும் உரியவர்களாக உள்ள நிறுவனமே பொதுப்பங்கு நிறுவனம் ஆகும்

ஆகையால் இக் கருத்தரங்கு மூலம் அம்பாறை மாவட்ட வணிக ,மற்றும் செல்வந்தர்கள் தங்களது முதலீடுகளை வங்கிகளில் வைப்புச் செய்யாது பங்குகளில் முதலீடு செய்து பயன் பெறுவார்கள் என்று கருதுகிறேன் என  தேசிய ஜனநாயாக மனித உரிமைகள் கட்சி  ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் கூறினார்கள் .

அம்பாறை மாவட்டத்தில் பங்குச் சந்தை (SHARE MARKET ) வணிகம் பற்றிய அறிவு மிகக் குறைவாகவே உள்ளது எனக் கருதுவதினால்  இதை அறிமுகப் படுத்துகிறேன் எனவும் கூறினார் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.