புதியவை

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிப் பயிற்சிகளின் போது குளவிக்கொட்டுக்கு இலக்கான 18 பேர்

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிப் பயிற்சிகளின் போது குளவிக்கொட்டுக்கு இலக்கான 18 பேர்
குளவிக்கொட்டுக்கு இலக்கான வெலிகந்தை பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்கள் உள்ளிட்ட 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்களில் பாடசாலை மாணவர்கள் 16 பேரும், இரண்டு ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.
பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது இன்று முற்பகல் இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐவர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.