புதியவை

பாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆயுததாரிகள் கைவரிசை; எழுவர் பலி 20 இற்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆயுததாரிகள் கைவரிசை; எழுவர் பலி 20 இற்கும் மேற்பட்டோர் காயம்
பாகிஸ்தானின் சர்ஷாதா பல்கலைக்கழகத்தின் மீது ஆயுததாரிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதலினால் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதா அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் எத்தனை ஆயுததாரிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பதஞு தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன் தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை. இதுவரை ஆயுததாரிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் எவரேனும் பணயக்கைதிகளாக பிடிபட்டுள்ளனரா என்பது தொடர்பிலும் தகவல்கள் வெளிவரவில்லை.
தற்போதும் தாக்குதல் நடவடிக்கை பல்கலைக்கழகத்தினுள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திலுள்ள 3000 மாணவர்களுக்கும் 600 விருந்தினர்களுக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.