புதியவை

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி ஜனவரி  மாதம் 2016
....................................................................................
=இது அவரவர் திறமைகளை வளர்க்கும் போட்டி

=இது ஜனவரி   மாதப் போட்டி இந்த வருடத்தின் முதல்  போட்டி

இவ்வருடப் போட்டியுடன் ஐந்தாண்டு நிறைவேறுகின்றது அல் ஹம்துலில்லாஹ் 
    
= இம்முறை போட்டியின் (தலைப்பு -(மனிதாபிமானம்)

=போட்டிக்காகஅனுப்பப்படும் கவிதைகள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைத்தளங்கள் உட்பட) இருத்தல் கூடாது.

= போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – கவிதைகளை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்.


=கவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்
=அத்தோடு உறுதிப் படுத்தல் வேண்டும்

=போட்டி விதிகள்…
...........................
=எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது


=ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.

=கவிதைகள் அனுப்பும் போது தனது சொந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து மட்டுமே போட்டிக்கவிதைகள் அனுப்ப வேண்டும்


=இன்னுமொருவர் முகவரியில் இருந்து அனுப்புவதையோ .முக நூல் இன் பொக்ஸ்க்கு,அனுப்புவயோ தவிர்த்துக்கொள்ள வேண்டும்

..........................................................................................................................
கவிதைகளை நேரடியாக இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே
thadagamkalaiilakkiyavattam@gmail.com அனுப்புதல் வேண்டும் 
................................................................................................
போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்
,
புனைப் பெயர்,..............
முழுவிலாசம்,............
கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள.........
தமது சொந்த புகைப் படம்........
தன்னைப்பற்றிய குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும் நாம்முகவரியை எடுப்பது வெற்றி பெற்ற பின்பு சான்றிதழ் அனுப்புவதற்கு மட்டுமே தொலை பேசி தகவல் சொல்வதற்கு மட்டுமே இது வரை நாம் தனிப்பட்ட முறையில் போட்டியாளர்களுடன்  பேசியது இல்லை என்பதை இதற்கு முன் போட்டியில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் அறிவீர்கள் எங்களால் எந்த வித தொல்லைகளும் உங்களுக்கு ஏற்படாது 
................................................................................................................................
அத்தோடு கவிதைகளை கூகுளில் (google)டைப்பண்ணி அனுப்பி வைக்கவும்
................................................................................................................................. 
0 பொது தளத்திற்கு போடிக்காக அனுப்பும் புகைப் படங்களை அநாகரிகமாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது 
.
0 தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு"கவியருவி பட்டமும்,சான்றிதழும்"

0 இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்

0 மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவின்கலை" பட்டமும் ,சான்றிதழும்

0 மாதத்தின் சிறந்த கவிதைக்கு "கவினெழி " பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது

0 எங்களது பணி! அற்புதமான பணி!அரிதான பணி !!இதை வரமாக 

 பயன் படுத்திக் கொள்ளுங்கள் 

0 தற்போது உள்ள மனிதாபிமானத்தைப் பற்றி சிந்தியுங்கள் அருமையான கவிதைகளை எழுதுங்கள்

0 இப்போட்டியில் நிர்வாகக் குழுவினரதும், நடுவர்களினதும்     முடிவே இறுதியானது
...................................................................................................................

0 தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை

0 இம் மாதம்( ஜனவரி ) 31ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்)

0 போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்

0 தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்
இளம் கவிஞர்களின் முன்னேற்றத்துக்காகவும்
செயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.

இதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை போட்டியில் பங்கு  பற்று வோர்கள் எல்லோரும் எமக்கு உறவுகளே யாகும் 

கவினுறு கலைகள் வளர்ப்போம்

நன்றி
அன்புடன் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)
தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.