புதியவை

82 வருடங்களாக விபத்துக்கள் ஏதுமின்றி வாகனமோட்டும் இங்கிலாந்து தாத்தா

82 வருடங்களாக விபத்துக்கள் ஏதுமின்றி வாகனமோட்டும் இங்கிலாந்து தாத்தா
நமக்கு நன்றாக கண் பார்வை இருந்தும், திடகாத்திரமான உடல்நிலை இருந்தும் எந்தவித விபத்துமின்றி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது மிகக்கடினம். ஆனால், இங்கிலாந்தில் உள்ள 103 வயது தாத்தா இன்றைய தனது முதிர்ந்த காலத்திலும் விபத்து ஏதுமன்றி கம்பீரமாக கார் ஓட்டி வருகிறார்.
இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் இல் வசித்து வருபவர் ஜியாவான்னி ரோஸ்ஸோ 23 வருடமாக மிட்சுபிஷி லேன்சர் காரை தன்னுடன் வைத்துள்ளார். இந்த காரில்தான் தனது மனைவியை அடக்கம் செய்துள்ள இடத்திற்கு தினந்தோறும் சென்று வருகிறார்.
இவர்தான் இங்கிலாந்தில் உள்ள மிக வயதான வாகன ஓட்டுனர் என்று அறியப்படுகின்றது. 82 வருடங்கள் கார் ஓட்டி வரும் இவர் இரண்டு முறை மட்டுமே வேகமாக வண்டி ஓட்டியதற்காக அபராதம் கட்டியுள்ளார். அதன்பின் எந்தவொரு விபத்து சம்பவத்திலும் அவர் ஈடுபட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.