புதியவை

மலேசியப் படைப்பாளிகளை இலங்கைப் படைப்பாளிகள் வரவேற்றனர். தமிழருவி


மலேசியாவில் வாழும் இலக்கியப் படைப்பாளிகள் தம்மோடு உலகெங்கிலும் உள்ள தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுடனான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கோடு தமிழர் வாழும் நாடுகளிற்கு 30 40  வரையான படைப்பாளிகளுடன் பயணம் செய்து வருகிறார்கள

  அந்த வகையில் தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டுஅமைப்பின் 30 ஆண்டு விழாவின்  அழைப்பினை  ஏற்று  அக் குழுவின் தலைவர்  

திரு.பெ.இராசேந்திரன் ஜயா தலைமையில் 36 மலேசியப் படைப்பாளிகள்  இலங்கைக்கு வருகை தந்தார்கள்இலங்கையில் திருகோணமலை, கிறின் வீதி, சன் சைன் நிறுவன (விடுதியின் ) அரங்கில் (மண்டபத்தில்) 15/12/2015 செவ்வாய் மாலை நான்கு மணிக்கு இலங்கைக்கு வருகை தந்த மலேசிய இலக்கியப் படைப்பாளிகளை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மலேசியப் படைப்பாளிகள் குழுத் தலைவர் திரு.இராசேந்திரன் மற்றும் அவருடன் வருகை தந்த திருமதி.சுடர்மதி அம்மா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வை இலங்கைத் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் -தலைவி கலைமகள் ஹிதாயா ரிஸ்விஅவர்கள்  தலைமையேற்றுப் பொறுப்புடன் நிகழ்த்தினர்.

 இந்நிகழ்வில் கனடா படைப்பாளி உலகம் அமைப்பும், தடாகம் கலை இலக்கிய வட்டம் அமைப்பும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அமைப்பும், இணைந்து படைப்பாளிகளுக்கு மதிப்பளிப்பு நிகழ்வையும் நடாத்தினர்.

 இந்நிகழ்வில் 40இற்கு மேற்பட்ட இலங்கை மற்றும் மலேசிய மூத்த படைப்பாளிகள், இளைய படைப்பாளிகள் என மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வினைத் தடாகம் கலை இலக்கிய வட்டம் அமைப்பாளரான கலைமகள் ஹிதாயா ரிஷ்வி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். 

அவர் மதிப்புரை நிகழ்த்தும் போது  இந்நிகழ்விற்கான நினைவுப் பரிசில், சான்றிதழ்களை மலேசியாவில் தயாரித்து திரு.ரூபன் ('ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றத் தலைவர்) அவர்கள் அனுப்பி வைத்ததாகவும் அவரது உதவிகளைத் தான் ஒரு போதும் மறக்க இயலாது என்றும் கூறினார்.

மேலும் மலேசிய எழுத்தாளர்களுக்கான இரவு விருந்தினைக் கனடா படைப்பாளி உலகம் அமைப்புத் தலைவர் திரு.ஜங்கரன் அவர்கள் பொறுப்பேற்றதாகவும் அவருக்கும் அமைப்பின் ஆலோசகர் முகைதீன் வாபா அவர்களுக்கும்  அவர் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வை ஒழுங்காக ஏற்பாடு செய்து சிறப்புற நிகழ்த்திய 'தடாகம் கலை இலக்கிய வட்டம்' என்ற அமைப்பின் மேலாளரான பெருமதிப்புக்குரிய கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள்
 பல துறை ஆற்றல் மிக்க அறிஞர். முப்பது ஆண்டுகளாகத் 'தடாகம் கலை இலக்கிய வட்டம்' அமைப்பை நடாத்தி இலக்கியப் பணி ஆற்றியமையை மதிப்பளித்து 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஊடாக அதன் தலைவர் ரூபன் (தம்பிராசா தவரூபன்) மலேசியாவிலிருந்து அனுப்பி வைத்த 'தமிழ்மாமணி' நினைவுப் பரிசும் சான்றிதழும் வழங்கி, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்தும் கௌரவிக்கப் பட்டார் 

இப்படியெல்லாம் இலங்கையில் நிகழ்ந்த மலேசிய இலக்கியப் படைப்பாளிகளை வரவேற்கும் நிகழ்வைச் சுருக்கிச் சொல்லி முடிக்க முடியாது. இந்நிகழ்வினூடாக இலங்கை - மலேசியப் படைப்பாளிகள் கருத்துப் பரிமாறல், வரவேற்பு, விருந்தோம்பல் யாவும் இருசாராருக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தப் பலப்படுத்த உதவுமென என நம்புவோம். அதே வேளை இவ்வாறான நல்லுறவின் ஊடாக உலகம் எங்கும் நற்றமிழை, தமிழ் இலக்கியத்தை, தமிழர் பண்பாட்டைப் பேண முடியும் என்பது நம்பிக்கை தரும் செய்தி!

நிகழ்வில் கலந்து கொண்டவர் என்ற வகையில் நிகழ்விற்கு வருகை தந்தவர்களின் பேச்சில் இருந்து பொறுக்கிய தகவலைத் தங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒவ்வோர் ஆண்டும் பரிசில் வழங்கி உலகத் தமிழ் எழுத்தாளர்களை மதிப்பளிக்கிறது என அந்தக் குழுவின் தலைவர் திரு.பெ.இராசேந்திரன் ஜயா அவர்கள் சொன்னதும் அச்செயலை நிகழ்வில் கலந்து கொண்ட எல்லோரும் பாராட்டினர். உலகெங்கும் வாழும் தமிழர் எல்லோரும் அவர்களைப் பராட்டாமல் இருக்க முடியாது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் ஊடாக முப்பது ஆண்டுகளாக இலக்கியப் பணியாற்றுவதோடு படைப்பாளிகளை மதிப்பளித்து ஊக்குவிக்கும் உயரிய பணியைச் செய்து வரும் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களை அறிஞர்கள் பலர் பாராட்டினர்.

கனடா படைப்பாளி உலகம் என்ற அமைப்பை ஏற்படுத்திய நோக்கமே ஈழத்துப் படைப்பாளிகளை உலக அரங்கில் அடையாளப்படுத்தவென அதன் தலைவர் திரு.ஜங்கரன் அவர்கள் தெரிவித்தார். அதற்காகத் தாம் உழைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வைத் தொகுத்து வழங்கிய வன்னியூர் செந்தூரன் அவர்கள் தனது செந்தணல் வெளியீட்டகம் ஊடாக ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புக்களை நூலுருவாக்க உதவுவதாகச் சொன்னார்.

வசதியற்ற படைப்பாளிகளுக்கு உதவுவதே தமது அடுத்த இலக்கென தடாகம் கலை இலக்கிய வட்டம் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் தெரிவித்தார். .

ஈற்றில் இலங்கைக்கு வருகை தந்த மலேசிய இலக்கியப் படைப்பாளிகள்தடாகத்துடன் இணைந்து   தம்மை; இலங்கைப் படைப்பாளிகள் சிறப்பாக வரவேற்று மதிப்பளித்தனர் எனப் பாராட்டினர்.

 ஆக மொத்தத்தில் இவ்வாறான நிகழ்வுகள் தமிழை வாழ வைக்கும், தமிழை வாழ வைப்போரை ஊக்கப்படுத்தும். இவ்வாறான நிகழ்வுகள் உலகெங்கிலும் இடம்பெற வேண்டும் என்பதே எனது எண்ணம்.
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.