புதியவை

எரிபொருள் விலை வீழ்ச்சி: உடனடி நிவாரணத்திற்கு வாய்ப்பில்லை – பெற்றோலிய அமைச்சர்

எரிபொருள் விலை வீழ்ச்சி: உடனடி நிவாரணத்திற்கு வாய்ப்பில்லை – பெற்றோலிய அமைச்சர்
உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியின் பலனை நாட்டு மக்களுக்கு வழங்க முடியாதா, என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி இதற்கு பதிலளித்துக் கூறியதாவது;
2014 ஆம் ஆண்டு அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்து, குறைந்த விலைக்கு விநியோகித்தமையால் நாம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கினோம். அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னரே இந்த விலை சூத்திரத்தைத் தயாரித்துள்ளோம். நிதி அமைச்சும் அவர்களின் பரிந்துரைகளை வழங்க வேண்டியுள்ளது. ஜனவரி மாதம் உயர் பெறுமதியில் நாம் விலையைக் குறைத்தோம். ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் நாம் கொள்வனவு செய்த எரிபொருள் தொகையை தற்போது நாம் விநியோகித்து வருகின்றோம். நேற்றைய விலை மனுவிலேனும் இங்கு கூறப்படும் விலையை முன்வைக்க முடிந்ததா என நான் நம்பவில்லை. அதனால் எமக்கு கால எல்லையொன்று அவசியம். உடனடியாக நிவாரணத்தை வழங்கக்கூடிய வாய்ப்பு இல்லை.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.