புதியவை

தடாகம் - நாகினிமொட்டு கவிகளும் மோதித்தான் பார்த்திட
பாட்டு கவிமலர் பாய்ந்திலக்குத்.... தொட்டிட
வாட்டும் நடப்பு வடிக்கத் துணிவையும்
ஊட்டும் தடாகம் உவந்து!
உவந்து செயலாற்றும் உள்ளார்வத் தொண்டில்
தவழ்ந்து வளரும் தடாகப்.. புவனம்
கவனம் சிதையா கவியின் குளமாய்
கவலை குறைக்கும் களம்!
களம்பல கொண்டுண்மை கால்கள் பதித்து
வளர்திறம் நம்பிக்கை வார்க்கும்.. அளவில்
உளந்தனில் சிந்தனை ஊட்டும் தடாகம்
இளங்கவி வித்தக ஈடு!
ஈடுபாடு கொண்டு இலக்கியத் தொண்டினில்
ஊடுருவி என்றும் உலகாள.. நாடுகின்ற
பாடுமொழி வல்லோர் படைத்த தடாகமெனும்
ஆடுகளம் பாடல் அணி!
அணிந்த கவிமலரின் ஆற்றல் தரத்தைக்
கணிக்கும் திறனுடன் காழ்ப்பைத் ..தணிக்கும்
பணியும் தடாகக்கலை பன்முக வட்டம்
மணியாய் இணையத்தில் மா!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.