புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு உலகம் தழுவிய மாபெரும் டிசம்பர் மாத கவிதை போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடத்தைப் பெற்று "கவியருவி" பட்டமும்,சான்றிதழும்" பெருகின்றார் திரு.க.முரளிதரன்-வில்லூரான்
கவினுறு கவியால் நிறைக தடாகமே!
--------------------------------------------------------------

புவிதனிற் கவிஞர் புகழினைப் பாடும்
கவினுரு கவி மலர் பூத்திடும் தடாகம்
நவின்றிடும் நற்றமிழ் நலமே காக்கும்
நானிலம் புகழுறும் கவியதிற் பூக்கும்

உலகக் கவிகளும் உலவி உறவாடும்
கலைகளின் தாகம் தணித்திடும் தடாகம்
அழகு தமிழ்க்கவி அள்ளியே ஊத்திடும்
பழகு தமிழதாற் பாக்களும் பூத்திடும்

வலையிலும் வந்ததன் வாசம் மணக்கும்
அலைகடல் தாண்டியும் அன்பை சேர்க்கும்
கலையுளம் கொண்டோர் கவலை போக்கும்
கலைமகள் துணையிருக்க கவியாயிரம்; பூக்கும்

பண்புள வகையிற் தமிழ் நீர் நிரப்பும்
மாண்புள கவிகளின் மகிமை சுரக்கும்
தேன் மிகு தமிழ்க்கவி திரண்டே வழியும்
வான் அலையேறி வந்து மழை பொழியும்

துளிர் விடும் கவிக்கு துணையாய் நிற்கும்
வளர் தமிழ் மொழிக்கு வளமே சேர்க்கும்
களமது நிற்கக் கவியதிற் கனக்கும்
உளமது போலதில் உள்ளக்கமலமே பூக்கும்

கலைவளம் செழிக்கக் களமே ஆனாய்
கவிகளதில் தினம் ஊறுதே தேனாய்
கவலைகள் மறக்கக் களம் தரலானாய்
எழிழ் கவி ஏந்திடும் கடலென ஆனாய்

கலைவளம் பெருக்கும் கவித் தடாகமே!
நிலைத்திட வேண்டும் நின்புகழ் எங்கும்
மலைத்திடச் செய்திடும் வகையிற் கவியால்
கலைத் தடமிடுவோம் கவினுறு தமிழால்

திரு.க.முரளிதரன்-வில்லூரான் 


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.