புதியவை

மாலைத்தீவு முன்னாள் அதிபருக்கு பிரிட்டனில் சத்திர சிகிச்சை: சகோதரரை பிணையாக்கியது அரசு

மாலைத்தீவு முன்னாள் அதிபருக்கு பிரிட்டனில் சத்திர சிகிச்சை: சகோதரரை பிணையாக்கியது அரசு
பயங்கரவாத வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாலைத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீர் (48), மருத்துவ சிகிச்சைக்காக பிரிட்டன் செல்லவுள்ளார்.
தனது பதவிக் காலத்தின்போது குற்றவியல் நீதிபதியைக் கைது செய்தது தொடர்பாக 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது நஷீருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அவரது முதுகில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தியா, இலங்கை, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும், மாலைத்தீவு அதிகாரிகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சத்திர சிகிச்சைக்காக அவரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
எனினும், சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் முகமது நஷீர் மீண்டும் நாடு திரும்பவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தலைநகர் மாலியில் தங்கியிருக்க வேண்டும் என கடைசி நேரத்தில் மாலைத்தீவு அரசு நிபந்தனை விதித்தது.
அந்த நிபந்தனையை ஏற்க நஷீர் மறுத்துவிட்டார். இந்த நிலையில், அவர் மீண்டும் நாடு திரும்புவதற்கு உத்தரவாதம் அளிக்க அவரது சகோதரர் முன்வந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, சத்திர சிகிச்சைக்காக நஷீரை பிரிட்டன் அனுப்ப மாலைத்தீவு அரசு சம்மதித்துள்ளது.
அதையடுத்து, அவர் மாலைத்தீவிலிருந்து கொழும்பு வழியாக பிரிட்டன் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.