புதியவை

பட்டியலில் எனது பெயரே உள்ளது: பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் அசாத் சாலி


ஏ.ஆர்.ஏ.ஹாபிஸ் இராஜினாமா செய்தமையாலும் அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன காலமானதாலும் பாராளுமன்றத்தில் இரண்டு வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வாய்ப்புள்ளதா என ஊடகவியலாளர்கள் அவரிடமே கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளித்துக் கூறியதாவது;
உண்மையிலேயே நான் போட்டியிடுவதற்கே எதிர்பார்த்திருந்தேன். போட்டியிட வேண்டாம் எனவும் தேசியப் பட்டியலில் உறுப்புரிமை வழங்குவதாகவும் கூறினார். பட்டியலில் எனது பெயரே உள்ளது. பட்டியலில் உள்ளவர்கள் நியமிக்கப்பட வேண்டுமெனில் அதில் நானே காணப்படுகின்றேன். எனினும், பிரதமர் நாட்டில் இல்லை என நான் எண்ணுகின்றேன்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.