புதியவை

மாபெரும் டிசம்பர் மாத கவிதை போட்டியில் பங்கு பற்றி சிறப்புக் கவிதைக்கான கவினெழி பட்டத்தையும் சான்றிதலையும் பெருகின்றார் கவிதாயினி ஐ.எஸ். நுஹா-சம்மாந்துறை.

தடாகம்

கரைதோறும் கவிமான்கள்
கவினுறு தேன் சிந்தும்
பன் மலர்ச் சோலை
மிதந்தலரும் ஆம்பலினம்
முகம் மலரும் வாசம் வீச
மூழ்கிச் சிறை விரிக்கும்
மீனினங்கள் கானம் பாட
வட்டமிடும் நீர்ப்பறவைகள்
வரலாற்றில் தடம்பதிக்க
வாழிடமாம் தாய்மடியாம்
சரணாலயமெம் தடாகமன்றோ...
வானில் விரிந்த உன் 
பல்வண்ணச் சிறகுகளில்
சூரியர்கள், சந்திரர்கள்,
தாரகைகள், மின்மினிகள்
கலமும் உலாவும் 
இந்திரப் பிரஸ்தம்
கல் பதித்த ஆரமானாய்
தடாகம் - நீ
தாக சாந்தியளிக்கும்
வற்றாத ஊற்றானாய்
அனைத்துக்கோள்களும்
கவிக்குடும்பமாய்
பயணிக்கும் பால் வீதி
உன் வளிமண்டலத்தில்
பிழைக் கோணத்தில் நுளைய
முடியாதெப் பிறபொருளும்.
மன அழுத்தம் 
மட்டிலாக் கவலைகள்
உன்னில் ஜல சமாதியாகிவிடும்
அன்பையும் பண்பையும்
நல்லொழுக்க நெறிகளையும்
சமத்துவமாய்
விதைத்திடும் களமானாய்
உலக வரமானாய்
கலைமகளே
எம் தடாகத் தாயே
உன்மடி சாய வேண்டும்
என் மனம் சஞ்சலமுற்றிருக்கிறது.

- ஐ.எஸ். நுஹாசம்மாந்துறை.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.