புதியவை

சுவிட்ஸர்லாந்தில் அரச தலைவர்கள், வர்த்தகர்களை சந்தித்தார் பிரதமர்


உலக பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரைச் சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு அரச தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
சுவீடன் பிரதமர் ஸ்டெஃபன் லோஃப்வன் மற்றும் துருக்கி பிரதமர் அஹமட் தாவோதோக்லு ஆகியோரைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் இன்று முற்பகல் ஆரம்பமான உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உலகின் வர்த்தக நிறுவனங்கள் பலவற்றின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இலங்கையில் விரைவில் பாரியளவிலான முதலீடுகளில் ஈடுபடுவதற்கு குறித்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் பிரதமரிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக பிரசித்திபெற்ற மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தலைவர் ஜீன் பிலிப் கோர்டொய்ஸ்ஸை டாவோஸ் நகரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.